6 லயன் குடியிருப்பில் முறிந்து விழுந்த மரக்கிளை - நேரில் சென்று நலம் விசாரித்த பிரதி அமைச்சர்
இரத்தினபுரி - பெல்மடுல்ல, லெல்லுபிட்டிய தோட்டத்தின் பெரண்டுவ பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தின் காரணமாக 6 லயன் அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
லெல்லுபிட்டிய தோட்டத்தின் பெரண்டுவ பகுதியில் 30 அறைகளைக் கொண்ட லயன் குடியிருப்பின் மீது பாரிய அரச மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததையடுத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதனால் குறித்த லயன் குடியிருப்பில் வசித்து வந்த பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
30 அறைகள் கொண்ட லயன் குடியிருப்பு பாதிப்பு
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று (29.09.2026) நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், அங்கிருந்தவர்களுடன் சம்பவம் தொடர்பில் கலந்தாலோசித்து உள்ளார்.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்த அவர், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தற்போதைய தேவைகள் மற்றும் குடியிருப்பு நிலைமைகள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பாக்ஸ் ஆபிஸ்: 5 நாள் முடிவில் நடிகர் நானியின் தி பாரடைஸ் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
சென்னை 28 படத்தின் 3வது பாகமா.... அட்டகாசமாக வந்த அறிவிப்பு, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்... Cineulagam