கடற்றொழிலுக்கு சென்ற 55 வயது குடும்பஸ்தர் மாயம்..! பொதுமக்களின் உதவியை நாடும் குடும்பத்தினர்
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில், கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புன்னையடியைச் சேர்ந்த 55 வயதுடைய குணநாயகம் சிவானந்தம் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
55 வயது குடும்பஸ்தர் மாயம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வழமை போன்று கடற்றொழிலுக்காக சென்ற குறித்த நபர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எனினும், கடந்த மூன்று நாட்களாகத் தொடரும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் போதிலும் அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இவரது திடீர் மறைவால் குடும்பத்தினர் பெரும் சோகத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.
புகைப்படத்தில் உள்ள நபர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri