சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய்
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம், மல்வத்தை 04 பகுதியில் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வேலுப்பிள்ளை பிரவாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.நசீலின் உத்தரவின் பேரில், திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

விசாரணை முன்னெடுப்பு
மரண விசாரணைகளின் பின்னர், உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகச் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
நேபாளப் பெருவெள்ளம்: ஒரு மாதமாகியும் உறவினர்கள் குறித்து எதுவும் தெரியாததால் சோகத்தில் கனேடிய குடும்பங்கள் News Lankasri
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam