உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
யாழ்ப்பாணத்தில்(Jaffna) இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(10) காலை 9:30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழராட்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மலரஞ்சலி
இதன்பொழுது உயிரிழந்த ஒன்பது உறவுகளையும் நினைவு கூர்ந்து அமைக்கப்பட்ட நினைவுத்தூபியின் முன் சி.வீ.கே சிவஞானத்தினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டு அக வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் பொழுது வடமாகாண அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சி வி கே சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரான சுகிர்தன் , யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் ஆர்னோல்ட், இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாநாட்டு படுகொலை
இதேவேளை, உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51 வது ஆண்டு நினைவேந்தல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கத்தின் அழைப்பின் பெயரில் உலகத் தமிழராய்சசி மாநாட்டு படுகொலை நினைவு தூபியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன் பொழுது உயிர் நீத்த உறவுகளை நினைவறுத்தி பொதுச்சுடரினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் ஏற்றி வைத்துள்ளார். தொடர்ந்து ஈகை சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதன் பொழுது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் , வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் , உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் கருணாகரன் நாவலன்சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜோதி லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
