முடிவுக்கு வந்த 5ஆவது எல்பிஎல் தொடர்: மீண்டும் ஒருமுறை கிண்ணத்தை வென்ற ஜப்னா
புதிய இணைப்பு
இந்த ஆண்டு நடந்து முடிந்த 5ஆவது எல்பிஎல் தொடரில் காலி அணியை வீழ்த்திய ஜப்னா கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 184 ஓட்டங்களை பெற்றது.
185 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி, 15.4 ஓவர்கள் முடிவில் இலக்கை சுலபமாக அடைந்தது.
Jaffna Kings ?LPL Champions ?
— Sri Lanka Tweet ?? (@SriLankaTweet) July 21, 2024
Jaffna Kings won the LPL Final beating Galle Marvels.
Congratulations ?
Galle Marvels 184/6
Jaffna Kings 185/1
Rilee Rossouw 106*
Kusal Mendis 72* #Colombo #LKA #SriLanka #LPL2024 #LPL #JaffnaKings pic.twitter.com/fNE2Z4xojf
ஜப்னா அணி சார்பில் அதிரடியாக விளையாடிய ரைலி ரூசோவ் 53 பந்துகளை 106 ஓட்டங்களையும் குஷல் மெண்டிஸ் 40 பந்துகளில் 72 ஓட்டங்களையும் பெற்றார்.
அதற்கமைய, இதுவரை நடந்த 5 எல்பிஎல் தொடர்களில் 4ஆவது முறையாக ஜப்னா அணி வெற்றியீட்டியுள்ளது.
முதலாம் இணைப்பு
எல்பிஎல் (LPL) போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்று வரும் நிலையில், போட்டியின் இடைவேளையில் 500 ட்ரோன்களைக் கொண்ட ஒளிக் காட்சி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு எல்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்றையதினம் (21.07.2024) ஆர். பிரேமதாச அரங்கில் காலி மற்றும் ஜப்னா அணிகளுக்கியைல் நடைபெற்று வருகின்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
வலுவான நிலையில் ஜப்னா
காலி அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பானுக ராஜபக்ச 34 பந்துகளில் 82 ஓட்டங்களை பெற்றார்.
ஜப்னா அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அசித பெர்னாண்டோ 35 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
185 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் ஜப்னா கிங்ஸ் 12 ஓவர்களில் 143 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |