யாழ்.மல்லாகம் நீதிமன்றத்தில் சான்று பொருள் மாயம்
யாழ்.மல்லாகம் நீதிமன்றத்தில் சான்று பொருளான கஞ்சா போதைப்பொருள் காணாகமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருளான 50 கிலோ கஞ்சா மாயமாகி உள்ளது என தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியினால் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
யாழ்ப்பாணம் பகுதியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சான்று பொருளே இவ்வாறு காணாமல் போய்யுள்ளது.
மேலும் இது தொடர்பான விரிவான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மற்றும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |