முல்லைத்தீவில் 5 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி அபாயம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் பெரும்பாலானவை தற்போது செயலிழந்த நிலையில் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டம் 71 கிலோமீட்டர் கடற்கரை பிரதேசமாக காணப்படுகின்றது. கடற்கரையை அன்றி பல கடற்றொழில் குடும்பங்கள் பல விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வரும் பகுதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றன.
மாற்று நடவடிக்கை
மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் 5 கோபுரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவசரகாலங்களில் மக்களை விரைவாக எச்சரிப்பதற்கான மாற்று நடவடிக்கைகள் மற்றும் கோபுரங்களை மீளச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியம் என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட அனர்த்து முகாமை பிரிவு அறிவித்துள்ளது.