பொலிஸ் பெயரில் போலி விளம்பரங்கள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தி இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் அறிவுறுத்தல்
இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் உத்தியோகபூர்வமானவை அல்ல என்றும், போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கை பொலிஸின் பெயர், இலச்சினை மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் விளம்பரங்கள் அல்லது அறிவித்தல்கள் உண்மையானவை அல்ல என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே, இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் அறிவித்தல்களை மட்டுமே பொதுமக்கள் நம்புமாறு பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு
YOU MAY LIKE THIS..