தடுப்பூசி காரணமாக திடீரென சுகவீனமடைந்த பாடசாலை மாணவிகள்
கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுப்பதற்கான HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட பாடசாலை மாணவிகள் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை, அங்குருவத்தோட்ட பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஏழாம் வகுப்பில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அறிகுறிகள்
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று குறித்த பாடசாலையில் 7ஆம் வகுப்பில் பயிலும் 26 மாணவிகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
இதன்போது தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஐந்து மாணவிகளுக்கு தலைவலி, வயிற்று வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்த ,து உடனடியாக ஹல்தொட்ட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 8 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
