ஆட்குறைப்பை மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராணுவம்
அமெரிக்கா அரசு தனது இராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்து அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க இராணுவத்துக்கான நிதியில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி அமெரிக்க இராணுவத்தில் 5 சதவீதம், அதாவது சுமார் 25 ஆயிரம் தரைப்படை இராணுவ வீரர்களை குறைக்கவும் முடிவு செய்துள்ளனர்.
நவீன ஆயுதங்கள்
இந்நிலையில் வருங்காலத்தில் எதிரி நாடுகளை சமாளிக்கும் வகையில் நவீன ஆயுதங்கள் உற்பத்திக்கான செலவை அதிகரிக்க உள்ளதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உலகில் சக்தி வாய்ந்த இராணுவ படைகளை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதோடு, அமெரிக்க தரைப்படையில் 4 லட்சத்து 50 ஆயிரம் வீரர்களும், 50 ஆயிரம் ரிசர்வ் படைவீரர்களும் பணி புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
