வவுனியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி(VIDEO)
வவுனியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 5 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் மழையுடன் கூடிய காலநிலையானது கடந்த சில நாட்களாக நீடித்து வருகின்றது.
இதன் காரணமாக வவுனியா, தவசிகுளம் பகுதியில் காணப்பட்ட மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிகள் கூட்டிலிருந்து களைந்து சென்று அப்பகுதியில் நின்றவர்களை கொட்டியுள்ளது.
இதன்போது பார்வதி (வயது 66), இரத்தினசிங்கம் (வயது 66), மூர்த்தி (வயது 47) ஆகிய மூவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிக் கூட்டிலிருந்து களைந்து சென்ற குளவிகள் கொட்டியதில் அப்பகுதியில் நின்ற லயந்தன் (வயது 13) மற்றும் அருண்குமார் (வயது 31) ஆகிய இருவர் பாதிப்படைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் இருவேறு இடங்களில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 5 பேரும்
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.







பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
