கிழக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கிழக்கு ஜப்பானில் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களை உலுக்கிய 5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாகக் குறைந்தது 37 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பாராகி பிராந்தியத்தை மையமாகக் கொண்டு நிலப்பரப்பிற்கு அடியில் சுமார் 70 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்கான ரயில் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்ட போதிலும், பின்னர் அவை வழமைக்கு திரும்பின.
நிலநடுக்க அதிர்வினால் கட்டடங்கள் குலுங்கியதில் தளபாடங்கள் விழுந்ததாலும், மக்கள் பீதியடைந்து வெளியேற முயன்றதாலுமே பெரும்பாலானோர் காயமடைந்துள்ளனர்.