இலங்கையின் போக்குவரத்துத் துறையில் அதிரடி மாற்றம்! வரலாறு காணாத நிதி ஒதுக்கீடு
இலங்கையின் வீதி மற்றும் தொடருந்து உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்து நவீனமயப்படுத்துவதற்காக 487 பில்லியன் ரூபாய் வரலாறு காணாத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது அவர் இதனை அறிவித்தார்.
நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள்
இதற்கமைய, குருநாகல் – தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் – கலேவெல பகுதியை நிர்மாணிப்பதற்காக 30,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 2027ஆம் ஆண்டுக்காக மேலதிகமாக 27,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்திக்காக மேலும் 53,400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆரம்பகட்டப் பணிகள்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை – கலகெதர பகுதியின் நிர்மாணப் பணிகள் 2029 ஜூலை மாதத்திற்குள் நிறைவுசெய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், முன்மொழியப்பட்டுள்ள குருநாகல் – தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலைக்கான ஆரம்பகட்டப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கஹத்துடுவ – இங்கிரிய அதிவேக நெடுஞ்சாலைக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் வீதி வலையமைப்பை விரிவுபடுத்தி நவீனமயப்படுத்துவதுடன், நாடு முழுவதுமான போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவதும் இத்திட்டங்களின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri