இலங்கையில் மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கொலைகள்: வெளியான தகவல்
கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கையில் 48 சிறுவர்கள் உட்பட மொத்தம் 1,664 கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
2025 ஆம் ஆண்டுக்கான பொலிஸ் செயல்திறன் அறிக்கையின்படி 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 573 கொலைகளும், 2024 ஆம் ஆண்டில் 555 கொலைகளும், 2025 ஆம் ஆண்டில் 536 கொலைகளும் பதிவாகியுள்ளன.
இந்தக் காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களில் மொத்தம் 317 பெண்களும் அடங்குவர்.
கொலை வழக்கு
அதன்படி, 2023 இல் 105 பெண்களும், 2024 இல் 104 பெண்களும், 2025 இல் 108 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், மூன்று ஆண்டு காலத்தில் 48 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வருடாந்த செயல்திறன் அறிக்கைகளின்படி, 2023 இல் 16 சிறுவர்களும், 2024 இல் 20 சிறுவர்களும், 2025 இல் 12 சிறுவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று ஆண்டு காலத்தில் பதிவான மொத்த கொலை வழக்குகளில் சுமார் 93 சதவீத கொலைகளுக்கான காரணங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இதனிடையே, 2026 ஆம் ஆண்டுக்கான பொலிஸ் செயல்திறன் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.