அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட பலர் பேர் கைது (Video)
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
திருகோணமலை - குச்சவெளி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 45 பேரில் 25 பேர் 20 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு

கைதான அனைவரும் விசாரணைகளுக்காகக் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வல்வெட்டித்துறை
வல்வெட்டித்துறை கடற்பரப்பு ஊடாக படகில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நால்வர் கைது தொண்டமனாறு பகுதியில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொண்டமனாறு இராணுவச் சோதனைச் சாவடிக்கு அண்மையாக அதிகாலையில் நடமாடிய நால்வரையும் இராணுவத்தினர் விசாரணை நடத்திய போதே அவர்கள் படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை தெரியவந்தது.
படகு ஒன்றுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம் பணம் செலுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக தகவல்- பதுர்தீன் சியானா, தீபன், ராகேஷ், எரிமலை
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam