நாடாளுமன்றத்தில் 43ஆவது கறுப்பு ஜூலையை நினைவு கூர்ந்த தமிழ் எம்.பிக்கள்
1983ஆம் ஆண்டு வன்முறையின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாடாளுமன்றத்தில் இன்று(23.07.2026) நடைபெற்றது.
1983 ஜூலை வன்முறையின் 43ஆவது ஆண்டு நிறைவு இன்று (23) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நினைவுகூரப்பட்டது.
சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள்
ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை அடியோடு மாற்றிப்போட்ட அந்த கோரச் சம்பவம் நடந்து இன்றுடன் 43 ஆண்டுகள் கடந்துவிட்டன.

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலையில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தமும், எரிக்கப்பட்ட சாம்பலின் சாட்சியங்களும் இன்றும் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகவே நீடிக்கின்றன என தமிழ் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகும் தேவேந்திரமுனை பெரஹர - குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள்
தமிழ் மக்கள் விரக்தியில்
1983, ஜூலை 23 தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை இழைக்கப்பட்ட அநீதிகள் தமிழ் மக்கள் மீது நம்பிக்கையீனங்களையும் விரக்திகளையும் விதைத்திருக்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற சம நேரத்தில் நாடாளுமன்றத்தில் சிறிநாத் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
