நுவரெலியாவில் கனமழை: 35 வீடுகள் முற்றாக சேதம் - மக்கள் அவதி
நுவரெலியா மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை காரணமாக பல பகுதிகளில் ஆறுகள் பெருக்கெடுத்து வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல குடும்பங்களின் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(21.04.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
அக்கரப்பத்தனை பிரதேசத்தில் நேற்று(21) மாலை பெய்த இடியுடன் கூடிய கனமழை காரணமாக டொரிங்டன் பகுதியில் உள்ள ஆறு பெருக்கெடுத்ததால் அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தில் 25 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
35- க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு
அதேவேளை, வீடுகளில் இருந்த உடைகள், பாடசாலை மாணவர்களின் சீருடை, கற்றல் உபகரணங்கள் உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டிலுள்ள பெறுமதியான பொருட்கள் நீரில் முழ்கி சேதமாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அப்பகுயில் இருந்த விவசாய நிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால் விளைச்சலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, நாகவத்தை தோட்டத்தில் கடும் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஆறுகளும் பெருக்கெடுத்ததால் 10 வீடுகள் நீரினால் முழ்கியுள்ளன. இதன்போது,பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட நபர்கள் உடனடியாக அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவி ரதிதேவி பார்வையிட்டதுடன் அவர்களின் நிலைமையினையும் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam