பணம் அச்சடிக்கும் அரசாங்கம்:பொருளாதார நெருக்கடி வரப்போவதாக விமல் வீரவன்ச எச்சரிக்கை
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அரசாங்கம் பணம் அச்சடிப்பதாக குறிப்பிட்டபோதும் இல்லை என்று மறுத்தாலும் பணம் அச்சடிக்கப்பபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி நடத்தும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். அதில் தொடர்ந்துரையாற்றிய அவர்,
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அருட்தந்தை சிறில் காமினி:சுரேஷ் சலேவிடம் இருக்கும் ஆதாரங்கள்!
அச்சடிக்கப்பட்ட பணம்
2024-11-18 என்ற திகதியில் அச்சடிக்கப்பட்டுள்ளதாக குறித்த பணத்தாளை அவர் காண்பித்து உறுத்திப்படுத்தியதோடு அதில் நிதியமைச்சராக அநுர குமாரதிசாநாயக்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
ஆனால் ஐஎம்எப் நிபந்தனைகளின் படி பணம் அச்சடிக்க முடியாது.ஆனால் ஒவ்வொறு வருடமும் சேகரிக்கப்படும் சேதமடைந்த நாணயத்தாள்கள் அச்சடிக்கும் வழமையான செயற்பாடே நடைபெற்றதாக அரசாங்கம் மறுக்கவில்லை என்றார்.

அரசாங்கம் பணம் அச்சடிக்கவில்லை என்றே குறிப்பிட்டது தவிர வழமையான நடைமுறைகள் எதையும் குறிப்பிடவில்லை. எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையால் நாங்கள் இரண்டாவது பொருளாதார நெருக்கடியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இது தொடர்பில் நிபுணர்கள் எவரும் கதைப்பதில்லை.இந்த ஆபத்தை கண்டுகொள்ளாமல் அரசு அரசியல் குதூகலத்தில் எவ்வளவு விலை கொடுத்தாவது எரிபொருளை கொள்வனவு செய்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சென்றால் நாட்டை கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்படலாம்.அவ்வாறான ஒரு நிலையில் வெளிசக்திகள் எம்மை அடிமைப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன் வெளியான காணொளி: மறைக்கப்படும் உண்மை - சரத் வீரசேகர விடுத்துள்ள எச்சரிக்கை