தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அருட்தந்தை சிறில் காமினி:சுரேஷ் சலேவிடம் இருக்கும் ஆதாரங்கள்!
அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள அவதூறு மற்றும் குற்றவியல் வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே அருட்தந்தை சிறில் காமினி சுரேஷ் சலேவுக்கு எதிராக செயற்படுவதாக பாரிய குற்றச்சாட்டை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச சுமத்தியுள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் நேற்று முன்தினம் (20.04.2026) நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும் போதே இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்ட விடயங்கள்
பிள்ளையானின் கைதால் நடுங்கும் தென்னிலங்கை : சுரேஷ் சலேவுக்கு நாளை நீதிமன்றத்தில் நடக்கப்போவது என்ன..!
இருதரப்பு கலந்துரையாடல்
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் சிறில் காமினி உள்ளிட்ட அருட் தந்தையர்கள் சிலர் புலம் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரதிநிகளுடன் சூம் அல்லது வட்ஸ்செப் குரூப் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த தகவல்களை புலனாய்வு பிரிவில் பணியாற்றிய சுரேஷ் சலே பதிவு செய்துள்ளார்.

அதையடுத்து அருட்தந்தை சிறில் காமினி சுரேஷ் சலேவை தனிப்பட்ட ரீதியில் நிந்திக்கும் மற்றும் அவதூறு குற்றம் சுமத்தியுள்ளார்.
அதனை அடிப்படையாகக் கொண்டு அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக சுரேஷ் சலே இரகசியப் பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தில் அவதூறு மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்.
விமலின் கையில் இருக்கும் சாட்சியங்கள்
அருட் தந்தை சிறில் காமினி இரகசிய பொலிஸ் விசாரணையில் இவற்றை ஒப்புக் கொண்டுள்ளார்.அந்த சாட்சியமும் தன்னிடம் இருப்பதாக விமல் உறுதிப்படுத்தினார்.
சுரேஷ் சலே தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் சலேவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவிருந்த சந்தர்ப்பத்திலேயே அவருக்கு எதிராக அன்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட வேறொரு அருட் தந்தை தாக்கல் செய்த வழக்கிலேயே சுரேஷ் சலே மற்றும் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வே சலே மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் அருட்தந்தை சிறில் காமினி.
குற்றம் ஒன்று நடைபெறப்போகின்றது என முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தவர்கள் தற்போது விசாரணை செய்பவர்களாக மாறியிருக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரோஹினி செய்த காரியம், விஜயாவிற்கு பளார் விட சென்ற அண்ணாமலை... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan