போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபருக்கு கடூழிய சிறைத் தாண்டனை
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபருக்கு 4 ஆண்டுகள் கடுழீய சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் ரூபா 2 லட்சம் பிரகாரம் 4 லட்சம் ரூபாய் அபராதமும், அத் தொகையை செலுத்த தவறின் தனித்தனியே ஒரு ஆண்டு கால சிறைத்தண்டணையும் வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வவுனியா பறையனாளங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தூயநிறை 1.8 கிராம் ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்ய முற்பட்டமை தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
முல்லைத்தீவில் கடவுச்சீட்டு புகைப்படச் சேவை முடக்கம்! நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து
வழக்கு
இதனையடுத்து, அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கடந்த 2021 ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த வழக்கு தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமை (31.07) திகதியிடப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த குற்றச் சாட்டுக்கள் அரச சட்டவாதியினால் எதிரிக்கு எதிராக நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
,தூயநிறை 1.8 கிராம் ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்ய முற்பட்ட நபருக்கு தனித் தனியே 4 ஆண்டுகள் கடுழீய சிறைத் தண்டணையும், ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் ரூபா 2 லட்சம் பிரகாரம், 4 லட்சம் ரூபாய் அபராதமும், அத் தொகையை செலுத்த தவறின் தனித்தனியே ஒரு ஆண்டு கால சிறைத்தண்டணையும் வழங்கி தீர்ப்பளித்தார்.
சிறைத் தண்டனை
குறித்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரசு சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.

எதிரி குறித்த வழக்குடன் தொடர்புடையதாக எற்கனவே 2 ஆண்டுகளும், 3 மாதமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை போன்ற விடயங்களை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா குறித்த வழக்கின் தண்டணை தீர்ப்பின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
சமூகத்தில் பெருகி வரும் போதைப் பொருள் பாவனையும் அதனால் ஏற்படும் தாக்கங்களுக்கு இவ்வாறான தீர்ப்புக்கள் முன்மாதிரியானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri