தாயால் கைவிடப்பட்ட 4 வயது யானைக்குட்டி கந்தளாயில் மீட்பு
கந்தளாய் சீனிபுர இராணுவ முகாமிற்குப் பின்னால் தாயால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் நான்கு வயதுடைய யானைக்குட்டியை வனவிலங்கு அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் இந்தக் குட்டி யானையைக் கண்டதையடுத்து, உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
4 வயது யானைக்குட்டி
சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு அதிகாரிகள், முதலில் அந்தக் குட்டி யானையை அதன் தாயுடன் சேர்த்து வைக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
இதனையடுத்து, மீட்கப்பட்ட அந்த யானைக்குட்டி மேலதிக பராமரிப்புக்காக கிரித்தலே வனவிலங்கு சரணாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
