விமல் வீரவன்சவுக்கு பொலிஸ் அழைப்பாணை தொடர்பில் குளறுபடியான தகவல்கள்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான பொலிஸ் அழைப்பாணை தொடர்பில் குளறுபடியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னிலங்கையின் பிரபல பாதாள உலகப்புள்ளிகளில் ஒருவரான புவக்தண்டாவே சனா என்பவருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக விமல் வீரவங்ச அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
பொலிஸ் அழைப்பாணை
அது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக விமல் வீரவங்சவுக்கு நேற்றைய தினம் (06) தங்காலைப் பொலிசில் முன்னிலையாகுமாறு பொலிஸ் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள தனியார் தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும் தனக்கு அவ்வாறான எதுவித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என்று விமல் வீரவங்ச எமது செய்தியாளரிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே புவக்தண்டாவே சனாவுடன் ஜனாதிபதிக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக தெரிவித்த கூற்றின் அடிப்படையில் விமல் வீரவங்சவைக்கைது செய்யுமாறு ஆளுங்கட்சி அரசியல்வாதிகளிடம் இருந்து கருத்துக்கள் வெளியாகத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.