ஆபிரிக்காவில் குண்டு வெடிப்பு: இலங்கை படையினர் 4 பேர் படுகாயம்
மேற்கு ஆபிரிக்காவின் மாலியில் வெடிகுண்டு சாதனம் ஒன்று வெடித்ததில், இலங்கையைச் சேர்ந்த அமைதி காக்கும் படையினர் நால்வர் காயமடைந்ததாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்கும் இலங்கை படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பாரிய காயங்கள் ஏற்படாத நிலையில், மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதாக பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் ( 21.05.2023) மாலியின் கிடால் பகுதியில் உள்ள அமைதி காக்கும் படை முகாமில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆயுத வாகனத் தொடரணி
கவச வாகனம் ஒன்றில், ஆயுத வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு அளித்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2022ஆம் ஆண்டில் குண்டுத் தாக்குதலின்போது 14 படையினர் கொல்லப்பட்ட இடத்திலேயே கடந்த திங்கட்கிழமை சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 9 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam