தொடருந்து கடவையில் பயங்கர விபத்து – STF அதிகாரிகள் நால்வர் வைத்தியசாலையில்.
காலி – மாத்தறை நோக்கிப் பயணித்த பயணிகள் தொடருந்துடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குச் சொந்தமான ஜீப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (23) காலை, மிடிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருபாவில சந்திப்பிலிருந்து பிடிதுவ நோக்கிச் செல்லும் இரண்டாம் நிலை வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பயணித்த ஜீப் வாகனமே இவ்வாறு தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த நான்கு அதிகாரிகளும் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மிடிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் - பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri