தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆவது நினைவேந்தல்
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வானது இன்று (09.01.2024) அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
மலர் அஞ்சலி
இதன் போது, பண்டிதரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தலில் பண்டிதரின் குடும்பத்தினர், யாழ். மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன், யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அச்சுவேலியில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமை படையினர் முற்றுகையிட்டதால் ஏற்பட்ட சமரில் கப்டன் பண்டிதர் உட்பட பல போராளிகள் வீர மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






