சைவர்களின் மனதை புண்படுத்தும் திரைப்படம்: டக்ளஸின் முறைப்பாட்டுக்கு ஜனாதிபதி வழங்கிய பதில்
சைவர்களின் மனதை ‘கதிர திவ்யராஜ’ என்ற சிங்கள திரைப்படம் புண்படுத்துவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததையடுத்து இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று (08.01.2024) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘கதிர திவ்யராஜ’ என்ற சிங்கள மொழி திரைப்படத்தில், முருகப் பெருமானை அண்ணனாகவும் பிள்ளையாரை தம்பியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதில்
இது சைவ மக்களின் வழிபாடு முறைகளை திரிவுபடுத்தும் வகையில் உள்ளதோடு அவர்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது.
அத்துடன், அந்த திரைப்படத்தில் முருகப்பெருமானின் காதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நபருக்கு நெற்றிப்பொட்டுக்கு பதிலாக நாமம் பூசப்பட்டுள்ளது.
சைவர்களின் வரலாற்றை திரிபுப்படுத்தும் இந்த திரைப்படத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்யுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
You May like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |