யாழ்.கொக்குவிலில் பிரம்படி படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல் அனுஸ்டிப்பு
யாழ்.கொக்குவில் பிரம்படி பகுதியில் காணப்படும் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
இந்த நிகழ்வு இன்று (12) காலை 9.00 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, நினைவு தூபிக்கான பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
நினைவேந்தல்
இந்தநிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவினர்களால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1987 ஆண்டு 11ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில் யாழ்.கொக்குவில் பிரம்படி பகுதியில் இந்திய இராணுவத்தால் 50 ற்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
