இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி : வலுவான நிலையில் இங்கிலாந்து
சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 387 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதில் ஜோ ரூட் 206 பந்துகளை சந்தித்து 143 ஓட்டங்களை தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தார். இது அவரின் 33 ஆவது சதமாகும்.
இலங்கை அணியின் பந்துவீச்சு
முன்னதாக 11 ஓட்டங்களை பெற்றிருந்தபோது எல்பிடபில்யூ முறையிலான நெருங்கிய ஆட்டமிழப்பு ஒன்றில் இருந்து அவர் தப்பினார்.
இதனை தவிர கஸ் எட்கின்ஸன் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தப் போட்டியில், இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்ணான்டோ, மிலான் ரட்நாயக்க, லஹிருகுமார ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam
