பாகிஸ்தானில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 38 பயங்கரவாத அமைப்பினர்
பாகிஸ்தானில்(Pakistan) 38 பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த உறுப்பினர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நகரங்களில் நடத்தப்பட்ட உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வு அடிப்படை
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் CTD அதிகாரி கூறுகையில், இவர்கள் பயங்கரவாதிகள் என்றும், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் மற்றும் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அரசு குழுவைச் சேர்ந்தவர்கள் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், CTD இதுவரை மாதம் முழுவதும் 449 புலனாய்வு அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ''இந்த நடவடிக்கைகளில் ஏராளமான வெடிபொருட்கள், கைக்குண்டுகள், ஆயுதங்கள், தொலைபேசிகள் மற்றும் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயன்பாட்டு நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளோம்'' என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
