தொடருந்துகளில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை: 37 பேர் கைது
அனுமதி சீட்டு இல்லாமல் தொடருந்துகளில் பயணிக்கும் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின் போது, வழக்கமாக கட்டணம் ஏய்ப்பு செய்த 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து மொத்தம் 112,480 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அத்துடன், சீருடையில் உள்ள அதிகாரிகள் அனுமதி சீட்டு சோதனைகளை மேற்கொள்ளும்போது, அனுமதி சீட்டுக்களை பெறாத பயணிகளை எச்சரிக்கும் வகையில், சிலர் வட்ஸஅப் மூலம் செய்திகள் பரப்பி, அவர்களை தப்பிக்க வைக்கும் செயற்பாடும் இதன்போது கண்டு பிடிக்கப்பட்டது.
பொழுதுபோக்கு
பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தில் இன்று காலை 6:00 மணி முதல் காலை 8:00 மணி வரை சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ள 25 தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழு ஈடுபடுத்தப்பட்டது.
இந்த நிலையில், செல்லுபடியாகும் அனுமதி சீட்டுகள் இல்லாமல் பிடிபட்டவர்களில் பெரும்பாலோர் துப்புரவுத் தொழிலாளர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், சிலர் பொழுதுபோக்குக்காக அனுமதி சீட்டுக்கள் இல்லாமல் பயணம் செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
