மர்மமான முறையில் உயிரிழக்கும் தூதுவர்கள்! ஈரான் மீது சந்தேகம்
சுவிஸ் தூதுவர்கள் இருவர் ஈரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சுவிட்சர்லாந்தின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் ஈரானில் இரண்டு சுவிஸ் தூதுவர்கள் மற்றும் ஒரு சுற்றுலாப்பயணி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஈரானுக்கான சுவிஸ் துணைத் தூதர் சில்வி ப்ரனர்(Sylvie Brunner) தாம் தங்கியிருந்த குடியிருப்பின் 17ஆவது மாடியிலிருந்து கீழே தள்ளி விடப்பட்டு கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.
ஈரானிய அதிகாரிகள் அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர்.
தூதரக ஊழியர் மீது தாக்குதல்
இது நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெஹ்ரானில் உள்ள ஒரு விடுதியில் சரிந்து விழுந்து தலை மற்றும் வயிற்றில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சில மாதங்களுக்கு பின்னர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, சுவிஸ் தூதரக ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அவர் மீதான தாக்குதல் ஒரு வழிப்பறி முயற்சி என ஈரான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டாலும் அந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக சுவிஸ் உளவு அமைப்புகள் கூறியுள்ளன.
பிரேத பரிசோதனை முடிவுகள்
இதேவேளை, கடந்த ஜனவரி மாதம், உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட 60 வயது சுவிஸ் சுற்றுலாப் பயணி ஒருவர் செம்னான் சிறையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.
அவரது, உடல் சுவிட்சர்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட போதிலும் பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
ஈரானில் உள்ள சுவிஸ் தூதரகம் அமெரிக்காவிற்காக பணியாற்றுவதாக ஈரான் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
