பிளாஸ்டிக் பொருட்களால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Courtesy: shrikanth
சந்தையில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் மாணவர்களுக்கு புற்று நோய்கள் ஏற்படுவதாக வரத்தக வாணிபத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது தொடர்பில் இரண்டு மாதங்களில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று(3) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நோய்கள்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சந்தையில் காணப்படும் தண்ணீர் போத்தல் மற்றும் உணவு கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பெட்டிகளில் தரம் குறைவானதாக உள்ளது.
அதில் சூடான நீர்-உணவுகளை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.இதனால் அவர்களுக்கு இனம் காணமுடியாத நோய்கள் உருவாகின்றன.
இவை தொடர்பில் உலகளாவிய ரீதியில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது பரிசோதனைகளிலும் இது தொடர்பில் பல உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கடும் நடவடிக்கை
அவற்றைக் கருத்தில் கொண்டு இரண்டு மாதங்களில் சந்தையில் காணப்படும் தரமற்ற பொருட்கள் அகற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்தோடு பாவனையாளர் அதிகார சபை-கைத்தொழில் -சுகாதார -கல்வி அமைச்சுகளின் உதவியோடு நாம் கடும் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |