மட்டக்களப்பில் அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் 36வது ஆண்டு நினைவு தினம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்காகக் குரல்கொடுத்த நிலையில் கடத்தப்பட்டு காணால்போன அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் 36வது ஆண்டு நினைவு தினம் இன்று(18) அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது அவருடன் காணாமல் ஆக்கப்பட்ட அவரின் உதவியாளரான பேட்ரம் பிரான்சிஸ் நினைவுகூரப்பட்டார்.
நினைவு தினம்
ஊரணி சந்தியில் வாவிக்கரை பூங்காவுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அருட்தந்தையின் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமான நடைபெற்றது.
1923ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இவர், தனது 17 வயதில் இலங்கைக்கு வந்து தான் சாகும் வரையில் கிழக்கு மண்ணில் வாழ்ந்து, திருகோணமலை நகரத்து மண்ணிற்கும், மட்டக்களப்பு மண்ணிற்கும் கல்வித்துறை மற்றும் விளையாட்டு துறைகளுக்கு அளப்பரிய சேவையாற்றிய, இலங்கை தமிழர்களின் நியாயமான உரிமைக்காய் குரல் கொடுத்தவர் ஆவார்.

அமெரிக்காவில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்ற யேசு சபையில் இணைந்து அருட்தந்தை ஜோன் ஹேர்பட் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் தொடர்ந்த அடிகளாரின் சேவை, அந்தக் கல்லூரியை இலங்கையில் தேசியரீதியில் கூடைப்பந்தாட்டத்தில் "வெல்லப்பட முடியாத அணி" என்னும் நிலலைக்கு உயர்த்தியது.
தமிழ் மக்கள்
இதனைவிட இலங்கையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் வந்த போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்காகக் குரல்கொடுத்த, அருட் தந்தை 1990ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ம் திகதி ஏறாவூர் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தார்.
[RXF54Mஸ
1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வாழைச்சேனை பகுதியில் இராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் முற்றுகையிடப்பட்டிருந்த தமிழ் மக்கள், கிறிஸ்தவ குருவானவர்கள், அருட்சகோதரிகள் போன்றோரை பாதுகாப்பான முறையில் வெளியேற்றிவிட்டு, தனது வாகன ஓட்டுனரான 'பேட்ரம் பிரான்சிஸ்' என்ற தமிழ் இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, ஏறாவூர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
அவரை நினைவுகூரும் வகையில் இன்று ஊறணியில் உள்ள உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள்,பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 21 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam