முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு பிணையில் செல்ல அனுமதி
தனது எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் ஆகியோரை பிணையில் செல்லுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
வெளிநாடு செல்ல தடை
இதன்படி, இரு சந்தேகநபர்களையும் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், சந்தேகநபர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.