இரண்டு வருடத்தில் 369 இலட்சம் வருமான வரி - சிக்கிய மகிந்தவின் முக்கிய புள்ளி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, சட்டவிரோத சொத்துக்களைச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று (09.03.2026) கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோத சொத்துக்கள் ஈட்டியது தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, வந்திருந்த வேளையிலேயே, விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் மார்ச் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 2010 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் அவருக்கு கிடைத்த ஆதாயத்திலே 369 இலட்சம் வருமான வரி செலுத்த தவறியதற்காக கடந்த வருடம் அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதேவேளை மிகின் லங்கா நிறுவனத்திற்கு இரண்டு பேருந்துகளை கொளவனவு செய்தததன் அடிப்படையில் அரசாங்கத்திற்கு 31 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி....
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan