வடக்கில் தியாக தீபம் திலீபனின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் (Photos)
தியாக தீபம் திலீபனின் 35ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனி, மன்னார் பகுதியை வந்தடைந்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டிலே நேற்று (21.09.2022) இந்த பவனி மன்னாரை வந்தடைந்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி மற்றும் 20ஆம் திகதிகளில் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியொன்று வவுனியாவில் பல்வேறு கிராமங்களுக்கு சென்றிருந்தது. இதன்போது மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வலி. மேற்கு பிரதேச சபையில் அனுஷ்டிப்பு
வலி. மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (21.09.2022) வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரனின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த அமர்வின் போது, நீராகாரம் அருந்தாமல் வீரச்சாவு எய்திய தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது சபையில் உள்ள உறுப்பினர்களால் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு இரண்டு நிமிட அக வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: கஜிந்தன்
வல்வெட்டித்துறையில் அஞ்சலி
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறையில் எம்.ஜு.ஆர் சதுக்கத்தில் நேற்று (21.09.2022) இடம்பெற்றுள்ளது.
இந்த அஞ்சலி நிகழ்வை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலமை தாங்கி நடத்தியுள்ளார்.
விளக்கேற்றி, மலர்மாலை செலுத்தி உணர்விபூர்மாக இந்த நினைவஞ்சலி தொடர்ந்தும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: தீபன்
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் நேற்று (21.09.2022) உணர்வுபூர்வமாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்களால் தியாக தீபம் திலீபனின் நினைவுருவ படத்திற்கு ஈகைச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஒருநிமிடம் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: கஜிந்தன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
