கனடாவில் இலங்கையருக்கு அடித்த பெருந்தொகை அதிஷ்டம்
கனடா வாழ் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 35 மில்லியன் கனேடிய டொலர்கள் (8170 மில்லியன் இலங்கை ரூபா) லொத்தர் பரிசு கிடைத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இம்மாதம் 6ஆம் திகதி ஒன்ராறியோ லொட்டரி மற்றும் கேம்ஸ் நிறுவனத்தின் லொட்டோ மேக்ஸ் லொத்தரியில் முதல் பரிசை ஜே. ஜெயசிங்க என்ற இலங்கையர் வென்றுள்ளார்.
நெகிழ்ச்சி
குறித்த நபர் கனடாவுக்குச் சென்றதிலிருந்து லொத்தர் சீட்டுகளை வாங்குவதற்குப் பழகிவிட்டதாகவும், தனது மகள் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஒரு வாரத்தின் பின்னர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், தான் வாங்கிய லொத்தர் சீட்டுக்கே முதல் பணப்பரிசு கிடைத்ததை அறிந்தவுடன் இதயத்துடிப்பு அதிகரித்து கண்களில் கண்ணீர் வந்ததாகவும் ஜெயசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பரிசு தொகையில் புதிய வீடு, தனது மகளின் கல்வி மற்றும் பயணத்திற்காகவும் பயன்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |