இலங்கை கடற்படையின் தீவிர கண்காணிப்பு : 33 இந்தியர்கள் கைது

Indian fishermen Government Of Sri Lanka India Sri Lanka Navy
By Sajithra Jan 26, 2025 06:47 AM GMT
Report

மன்னாருக்கு (Mannar) வடக்கே உள்ள கடல் பகுதியில் நேற்றும் இன்றும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது, ​​இலங்கை கடற்படை மற்றும் கடலோர பொலிஸார், சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 33 இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது, 03 இந்திய கடற்றொழில் படகுகளும் பறிமுதல் செய்ய்யப்பட்டுள்ளன. 

வெளிநாட்டு கடற்றொழில் படகுகளின் சட்டவிரோத கடற்றொழில் நடைமுறைகளைத் தடுக்க, இலங்கை கடல் எல்லையில் கடற்படை மற்றும் கடலோர பொலிஸார் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

எந்தவொரு விசாரணையிலும் தலையிடோம்..! அதிகாரிகளுக்கு அநுர வழங்கும் சுதந்திரம்

எந்தவொரு விசாரணையிலும் தலையிடோம்..! அதிகாரிகளுக்கு அநுர வழங்கும் சுதந்திரம்

கண்காணிப்பு நடவடிக்கை 

இந்த நடைமுறைகள் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அடிப்படையாக கொண்டும் முன்னெடுக்கப்படுகின்றன. 

இலங்கை கடற்படையின் தீவிர கண்காணிப்பு : 33 இந்தியர்கள் கைது | 33 Indian Fishermen Arrested By Sl Navy

அந்தவகையில், நேற்று (25) இரவு மற்றும் இன்று (26) அதிகாலையில் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத கடற்றொழில் ஈடுபட்ட இந்திய கடற்றொழில் படகுகளை வட மத்திய கடற்படை கட்டளை அதிகாரிகள் பிடித்துள்ளனர். 

வடக்கு கடற்படை கட்டளை மற்றும் கடலோர பொலிஸார் தங்கள் விரைவுத் தாக்குதல் படகையும், வட மத்திய கடற்படை கட்டளையின் கரையோர ரோந்து படகையும் அனுப்பி தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் கடற்றொழில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய கடற்றொழில் படகுகளை சுற்றி வளைத்துள்ளனர். 

இலங்கை கடற்படையின் தீவிர கண்காணிப்பு : 33 இந்தியர்கள் கைது | 33 Indian Fishermen Arrested By Sl Navy

இந்த நடவடிக்கைகளின் விளைவாக 03 இந்திய கடற்றொழில் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இலங்கை கடல் எல்லையில் தொடர்ந்து தங்கியிருந்த 33 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் (03) மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் (33) இரணைதீவுக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். 

தவறாகப் பயன்படுத்தப்படும் பொலிஸார் : நீதிச்சேவைகள் ஆணையகத்தின் அறிவிப்பு

தவறாகப் பயன்படுத்தப்படும் பொலிஸார் : நீதிச்சேவைகள் ஆணையகத்தின் அறிவிப்பு

இளையோரின் சிந்தனைகள் தடம் மாறமால் இருக்க வேண்டும் - ஆளுநர் நா.வேதநாயகன்

இளையோரின் சிந்தனைகள் தடம் மாறமால் இருக்க வேண்டும் - ஆளுநர் நா.வேதநாயகன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US