எந்தவொரு விசாரணையிலும் தலையிடோம்..! அதிகாரிகளுக்கு அநுர வழங்கும் சுதந்திரம்
மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக தனிநபர்களைக் கைது செய்வதிலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் பொலிஸ் உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் எந்தவொரு அழுத்தங்களையும் பிரயோகிக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.
ஹோமாகம, பிடிபன பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, சில சட்ட ரீதியான அதிகாரிகள் தங்களுக்கு அழுத்தங்களை வழங்காத அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை வழக்குகளை மறைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
அத்தகைய அதிகாரிகள் தங்கள் கடமைகளை சுதந்திரமாக மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து குறுகிய காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எதிர்க்கட்சி குழுக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கான அடிப்படைக் கொள்கை கட்டமைப்பு தற்போது தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 3 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
