தவறாகப் பயன்படுத்தப்படும் பொலிஸார் : நீதிச்சேவைகள் ஆணையகத்தின் அறிவிப்பு
சில நீதித்துறை அதிகாரிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பொலிஸார், தவறாகப் பயன்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டும் ஒரு அநாமதேய மனுவின் (Anonymous Petition) உள்ளடக்கங்களை நீதித்துறை சேவை ஆணையகம், நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இந்த‘அநாமதேய மனுவை’ பரிசீலித்த பின்னர், அதனை நீதிச்சேவைகள் ஆணையகம், ‘நீதிபதிகளின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் ஒரு கடிதத்தை நீதிபதிகளுடன் பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்;டுள்ளது.
தனிப்பட்ட வேலைகளுக்குப் பயன்படுத்துவதாக..
முன்னதாக இந்த மனு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டு, நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கான உத்தரவுடன் நீதிச்சேவைகள் ஆணையகத்துக்கு மீண்டும் அனுப்பப்பட்டதாக இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து பொது ஊழியர்களை தவறாகப் பயன்படுத்துவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும், பொதுமக்களுக்கு சேவை செய்வதே பொலிஸாரின் முதன்மைக் கடமை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் நீதிச்சேவைகள் ஆணையகத்தின் அறிவிப்பு சுட்டிக்காட்டிள்ளது.
நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள், தமக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை, தங்கள் பாதுகாவலர்களாகவும், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருக்கும்போது அவர்களை தனிப்பட்ட வேலைகளுக்குப் பயன்படுத்துவதாகவும் இந்த அநாமதேய மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் மீதான மற்றொரு குற்றச்சாட்டும் இதில் முக்கியமானதாகும்.
நீதிபதிகளுக்கு பொலிஸ் வழங்கும் பாதுகாப்பு
நீதிபதிகளின் வீடுகளில் பாதுகாப்புக்காக நான்கு பொலிஸார் நியமிக்கப்பட்டிருந்தாலும், வெளியூர்களில் பணியாற்றும் சில நீதிபதிகள், அவர்கள் இல்லாதபோது தங்கள் தனிப்பட்ட வீடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், பொலிஸாரை பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீதிபதி சரத் அம்பேபிட்டியவின் கொலைக்குப் பின்னர், நீதிபதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது.
எனினும், இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பொலிஸாரை தவறாகப் பயன்படுத்தியது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழு தமது அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம் குறித்த அநாமதேய மனுவில், சில சட்டமா அதிபர் துறை அதிகாரிகள் மீதும், பொலிஸாரை தவறாக பயன்படுத்தும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |