குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம்!
மூதூர் - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் நினைவுகூரப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வை இன்று(11.2.2026) குமாரபுரம் கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு ,மலர்தூவி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பொதுமக்கள் படுகொலை
குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் பாதிக்கப்பட்ட குமாரபுரம் மக்களினால் வேலன் சுவாமிகளிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.

குறித்த படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு 30 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையில் அதற்கான நீதியைக் கோரி குறித்த படுகொலையின் 30வது நினைவேந்தல் நிகழ்வை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளனர்.
பாதிப்பு
குறித்த பாதிப்பில் இருந்து மீளாத மக்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டநிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் 1996.02.11ம் திகதி மாலை அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.