கொழும்பில் உள்ள கஞ்சா களஞ்சியசாலையை சுற்றிவளைத்த பொலிஸார்
வத்தளை - மாபோலை பிரதேசத்தில் 300 கிலோ எடைகொண்ட கேரள கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த இரண்டு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் பிரகாரம் வத்தளை, மாபோலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இருவர் கைது
அதன்போது, குறித்த வீட்டில் இருந்து 540 இலட்சம் ரூபா பெறுமதியான 300 கிலோ கிராம் எடைகொண்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதனை கேரள கஞ்சா களஞ்சியசாலையாக பயன்படுத்தி கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



