யாழில் 30 இலட்சம் பெறுமதியான ஐம்பொன் சிலை மீட்பு
யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வைத்து இந்த சிலை இன்று (30.10.2023) கைப்பற்றப்பட்டுள்ளது.
வவுனியாவில் திருடப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை ஒன்று யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிலையை கடத்தி வந்தவர் தப்பி சென்றுள்ள நிலையில் சிலை கைப்பற்றப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்- கஜிந்தன்





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 20 மணி நேரம் முன்

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
