திருகோணமலை சம்பூர் பகுதியில் நள்ளிரவில் மூன்று பெண்கள் கைது! கதறி அழும் குடும்பம்
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று (12) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்களை பொலிஸார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் மூவரையும் சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது கமலேஸ்வரன் தென்னிலா, கமலேஸ்வரன் விஜிதா, காளிராஜா சுஜா ஆகிய மூன்று பெண்களே கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அநாகரிகமான முறை
இரவு வேளையில் துப்பாக்கிகளுடன் வந்த ஆண், பெண் பொலிஸாரால் அநாகரிகமான முறையில் கைதானவர்கள் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முண்னனியின் முன்னாள் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஹரிகரகுமாரும் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பொலிஸார் தடை உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri