போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட கடற்படை சிப்பாய்க்கு விளக்கமறியல்
அநுராதபுரத்தில் (Anuradhapura) போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படை சிப்பாய் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை நீதிமன்றம் நேற்றைய தினம் (12.05.2024) பிறப்பித்துள்ளது.
விளக்கமறியல் உத்தரவு
கடற்படைச் சிப்பாய் ஒருவர் பெண்ணொருவருடன் இணைந்து போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக அநுராதபுரம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து,மேற்கொண்ட திடீர் சோதனையில் கடற்படைச் சிப்பாய் மற்றும் அவருடன் இணைந்து போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினம்(12) அவர்கள் இருவரும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 6 நிமிடங்கள் முன்
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri