வெளிநாட்டில் விடுதியொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்
ஜப்பானின் சிபா மாகாணத்தில் 21 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10:20 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
ஜப்பானில் கல்வி பயின்று வந்த மாணவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விசாரணையில் வெளியான தகவல்
இவருடன் விடுதியில் தங்கியிருந்த 18 வயதான இலங்கை மாணவர் ஒருவரே இந்த கொலையை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான 18 வயதான இளைஞர், ஜப்பான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தன்னையும் தனது தாயையும் அவமதித்ததால் ஏற்பட்ட கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த தாக்குதலை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
தேசிய வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை..
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம் News Lankasri