மாவீரர் நாளில் முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தாக்குதல்! மூன்று இராணுவ அதிகாரிகள் கைது
முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் மீது தாக்குதல் மேற்கொண்ட மூன்று இராணுவ அதிகாரிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் இன்று காலை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை (27) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் மீது இராணுவத்தினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதில் காயமடைந்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே இன்றையதினம்(28) முல்லைத்தீவு நகரில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்துக் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம்: கண்டன போராட்டம்
மாவீரர் நாளில் முல்லைத்தீவில் எமது ஊடகவியலாளர் மீது கொடூர தாக்குதல்
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri