முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம்: கண்டன போராட்டம்
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தின் பல்வேறு ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு நகரப்பகுதியில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது. ஊடகவியலாளர் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் தாக்குதல்கள் சித்திரவதைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், சமூக செயற்பாட்டாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
போராட்டம் இடம்பெற்ற இடத்தை சூழ ஆயுதம் தங்கிய இராணுவத்தினர் பலர் நிறுத்தப்பட்டிருந்ததோடு புலனாய்வாளர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் கலகம் அடக்கும் பொலிஸாரும் பேருந்து ஒன்றில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை
வாகனம் ஒன்றில் வந்த இராணுவத்தினர் போராட்டம் மேற்கொண்டவர்களை தொலைபேசியில்
புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.








வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
