வடக்கில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் வவுனியா பொலிஸாரால் கைது

Vavuniya Northern Province of Sri Lanka Inspector General of Police
By Thileepan Jun 14, 2024 07:03 PM GMT
Report

வடக்கின் மூன்று மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 3 பேர் வவுனியா(Vavuniya) குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (14.06.2024) தெரிவித்துள்ளனர்.

போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஒன்று சேரும் உலக நாடுகள்

போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஒன்று சேரும் உலக நாடுகள்

பொலிஸ் விசாரணைகள்

வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், தொலைபேசி ஒன்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் பாதிக்கப்பட்டவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏம்மந்த தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்கா (37348), திலீபன் (61461), பொலிஸ் கொன்தாபிள்களான உபாலி (10945), தயாளன் (9792), ரணில் (81010) உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

வடக்கில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் வவுனியா பொலிஸாரால் கைது | 3 People Arrest Connection With Theft Case North

இதன்போது இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கு இடமான மூவர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வடக்கின் மூன்று மாவட்டங்களில் 6 இடங்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், புளியங்குளத்தில் பிறிதொரு வீடு உடைத்து பல பொருட்களையும் குறித்த சந்தேக நபர்களால் திருடப்பட்டுள்ளன.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர்

திருடப்பட்ட பொருட்கள்

மேலும், மன்னார் பகுதியில் வீடு உடைத்து 5 இலட்சம் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதுடன், மன்னார், பேசாலைப் பகுதியில் 3 வயது பிள்ளை அணிந்திருந்த ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சங்கிலியும் இவர்களால் அறுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் வவுனியா பொலிஸாரால் கைது | 3 People Arrest Connection With Theft Case North

யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றும் குறித்த நபர்களால் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட நகைகள் வவுனியாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் அடைவு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனைய திருடப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த 6 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவரும், வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரும், யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் இராணுவம் தொடர்பில் ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இஸ்ரேல் இராணுவம் தொடர்பில் ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US