முன்னாள் அமைச்சர் ஒருவரின் மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் சரண குணவர்த்தனவின் மனைவி உள்ளிட்டோரின் விளக்கமறியல் உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சரண குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கொன்றின் போது சிறைத்தண்டனை விதிக்கப்படுவதைத் தவிர்த்து, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு நீதிபதியைத் தூண்டுவதற்கான சரண குணவர்த்தனவின் மனைவி நீதிமன்றப் பதிவாளர் ஒருவர் மற்றும் சிற்றூழியர் ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றிருந்தார்.
விளக்கமறியல் நீடிப்பு
குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரும், அவரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்ட மினுவாங்கொடை நீதிமன்றப் பதிவாளர் மற்றும் கொழும்பு மேல்நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஆகியோரம் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம்குறித்த மூவருக்கும் எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 20ம் திகதி வரை அவர்களுக்கு எதிரான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.